Advertisement

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை: புதுச்சேரி விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து போக்சோ விரைவு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

புதுச்சேரி துப்புராய்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரோமார்க் சைமன் ஜீன் (26). தனியார் நிறுவனக் காவலாளி. இவர் புதுச்சேரியைச் சேர்ந்த 16 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதையடுத்து, அச்சிறுமி கர்ப்பமானார். இப்பிரச்சினை குறித்து சிறுமியின் தரப்பில் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போக்சோ வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு ரோமார்க் சைமன் ஜீன் கைது செய்யப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments