
சென்னை: சென்னையில் ஒரே வாரத்தில் 42 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க, புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை என்ற பெயரில் சென்னையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களைக் கண்டறிந்து கைது செய்ய அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments