Advertisement

ஆண்களை ஏமாற்றி 6 திருமணம் செய்த இளம்பெண் கைது

விழுப்புரம்: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த மகாலட்சுமி(25), மேல்மலையனூர் அருகே சிறுதலைப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பூண்டியான் மகன் மணிகண்டன் என்பவருக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமாகி பழகினர்.

இந்நிலையில் 2022-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தனர். 25 நாட்களுக்குப் பிறகு மகாலட்சுமி சொத்து சம்பந்தமான பிரச்சினையை கூறி தன் சொந்த ஊருக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றவர் திரும்ப வரவில்லை. மணிகண்டன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது விரைவில் வந்து விடுவதாக கூறினார். இருப்பினும் அவர் வராததால் மணிகண்டன் சில நாட்களுக்கு முன்பு வளத்தி போலீஸில் புகார் கொடுத்தார். அதில், மகாலட்சுமி செல்லும்போது 8 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் கொண்டு சென்றதாக தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments