
உத்தரப்பிரதேசத்தில் கட்டுக்கட்டாக 257 கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்திருந்த தொழிலதிபர், வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கான்பூரைச் சேர்ந்த பியூஷ் ஜெயின், வாசனை திரவியங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பான் மசாலா, குட்கா தயாரிக்கும் ஆலைகளை நடத்திவருகிறார். இவரது வீடு உள்ளிட்ட இடங்களில் கடந்த வாரம் மத்திய மறைமுக வரிகள் வாரியத்தின் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கட்டுக்கட்டாக 257 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியது. பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை எண்ணி முடிப்பதற்குள் அதிகாரிகள் சோர்ந்துபோயினர். மேலும் கிலோ கணக்கில் தங்க நகைகளும் கண்டறியப்பட்டன.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் தொழிலதிபர் பியூஷ் ஜெயினை கைதுசெய்துள்ளனர். பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் கிடைத்த பல கோடி ரூபாய் வருவாயை மறைத்தது, போலி ரசீதுகள் மூலம் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக தொழிலதிபர் பியூஷ் ஜெயினிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments