
கேரளாவில் மேலும் 19 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக எர்ணாகுளத்தில் 11 பேருக்கும் திருவனந்தபுரத்தில் 6 பேருக்கும் புதிதாக ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டிருக்கிறது. திருச்சூர் மற்றும் கண்ணூரில் தலா ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் கேரளாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அங்கு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்தி: ஒமைக்ரான் எதிரொலி: சென்னை வந்த மத்திய மருத்துவக் குழு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments