Advertisement

கோடநாடு வழக்கு செப். 2ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்கு வந்ததது. அப்போது, கோடநாடு விவகாரத்தில் சிலரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சயான் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.


கோடநாடு விவகாரம்: இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க புதிய மனு

image

இதையடுத்து வழக்கு விசாரணை செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜஹான், ''சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்'' என தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments