Advertisement

தமிழகத்தில் மேலும் 1,872 பேருக்கு கொரோனா - 29 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,872 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 62-வது நாளாக ஒருநாள் கொரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது.

1,45,584 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் 1,871, வெளிமாநிலங்களில் இருந்துவந்த ஒருவர் என கடந்த 24 மணி நேரத்தில் 1,872 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 25,43,040 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஏற்கெனவே 138 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனாவால் மேலும் 29 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,838 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 19 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 25,526ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 2,475 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,83,676 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments