Advertisement

சென்னை | நட்சத்திர ஓட்டலில் இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் கஞ்சா போதை விருந்தில் பங்கேற்ற 18 பேர் கைது

சென்னை: இரவு கொண்​டாட்​டம் என்ற பெயரில் கஞ்சா போதை விருந்​தில் பங்​கேற்ற சினிமா இசையமைப்​பாளர் மகள் உள்​ளிட்ட 18 பேர் கைது செய்​யப்​பட்​டனர். சென்னை கீழ்ப்​பாக்​கம், ஈ.வே.​ரா. சாலை​யில் உள்ள பிரபல நட்​சத்​திர ஓட்​டல் ஒன்​றில் `கஞ்சா' போதை விருந்து நடப்​ப​தாக கீழ்ப்​பாக்​கம் போலீ​ஸாருக்கு ரகசி​யத் தகவல் கிடைத்​தது.

இதையடுத்து போலீ​ஸார் அங்கு சென்று கண்​காணித்​த​போது, ஓட்​டல் அறை​யில் கஞ்சா புகைத்​த​வாறு இளைஞர்​களும், இளம் பெண்​களும் குத்​தாட்​டம் போட்​டுக் கொண்​டிருந்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments