Advertisement

ஆந்திராவைச் சேர்ந்த குடும்பத்தினர் கிருஷ்ணகிரி அணையில் குதித்து 2 பேர் தற்கொலை, 2 பெண்கள் மீட்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை​யில் குதித்து ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 4 பேர் தற்​கொலைக்கு முயன்​றனர். இதில் 2 பேர் உயி​ரிழந்​தனர். ஆந்​திர மாநிலம் குப்​பம் புதுப்​பேட்டை ஏ.பி. சாலை பகு​தி​யைச் சேர்ந்​தவர் லட்​சுமண மூர்த்தி (50). தனி​யார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஜோதி (40), மகள் கிருத்​திகா (20). இவர்​களு​டன் ஜோதி​யின் தாய் சார​தாம்​மாளும் (75) வசித்து வந்​தார்.

இந்​நிலை​யில், நேற்று 4 பேரும் கிருஷ்ணகிரி அணைக்கு வந்​தனர். அங்கு சிறிய மதகின் முன்​பகு​தி​யில் ஒவ்​வொரு​வ​ராக நீரில் குதித்​தனர். அங்கு மீன் பிடித்​துக் கொண்​டிருந்​தவர்​கள் அவர்​களைக் காப்​பாற்ற முயன்​றனர். இதில், கிருத்​தி​கா, ஜோதி ஆகியோர் மீட்​கப்​பட்​டனர். லட்​சுமண மூர்த்​தி, சார​தாம்​மாள் ஆகியோர் நீரில் மூழ்கி உயி​ரிழந்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments