
கேரளா: கேரளாவில் டேட்டிங் செயலியை பயன்படுத்தி வந்த 16 வயது சிறுவன் ஒருவர், பல நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் 16 வயது சிறுவன் ஒருவர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வந்ததாக தெரிகிறது. அப்போது அந்தச் சிறுவனுக்கு டேட்டிங் செயலி மூலம் சிலருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதை பயன்படுத்திக் கொண்ட அவர்கள், அச்சிறுவனை வரவழைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள், அந்தச் சிறுவனை பாலியல் தொல்லைக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments