Advertisement

திருத்துறைப்பூண்டி பைனான்சியர் வீட்டில் கொள்ளை முயற்சி - மலேசியாவை சேர்ந்த 4 பேர் கைது; ஒருவர் தலைமறைவு

திருவாரூர்: ​திருத்​துறைப்​பூண்டி பைனான்​சி​யர் வீட்​டில் நேற்று முன்​தினம் முகமூடி அணிந்து கொள்ளை முயற்​சி​யில் ஈடு​பட்ட, மலேசி​யா​வைச் சேர்ந்த 4 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். மேலும் ஒரு​வரைத் தேடி வரு​கின்​றனர். திரு​வாரூர் மாவட்​டம் திருத்​துறைப்​பூண்டி காவல் நிலை​யம் அரு​கில் வசிப்​பவர் கார்த்​தி(46).

பைனான்​சி​யர். நேற்று முன்​தினம் இரவு இவரது வீட்​டின் ஓர் அறை​யில் கார்த்​தி​யும், மற்​றொரு அறை​யில் அவரது மனை​வி, 2 மகள்களும் தூங்கிக் கொண்​டிருந்​தனர். அப்​போது, வீட்​டுக்​குள் புகுந்த முகமூடி கொள்​ளை​யர்​கள் 3 பேர், கார்த்​தி​யின் மனை​வி, மகள்​களிடம் கத்​தி​யைக் காண்​பித்​து, நகைகளை கழற்​றித் தரு​மாறு மிரட்​டி​யுள்​ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments