Advertisement

நாடு முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு: கிரிப்டோ கரன்சி மோசடியில் கோவையை சேர்ந்தவர் கைது

நாடு முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபட்ட வழக்கில், கோவையைச் சேர்ந்த முக்கிய நபரை புதுச்சேரி போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் அசோகன் (70). பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவரை 2023-ல் தொடர்பு கொண்ட மர்ம நபர், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய அசோகன் `ஆஷ்பே' என்ற இணையதளம் மூலம் ரூ. 98 லட்சம் முதலீடு செய்தார். அதன் மூலம் கிடைத்த ரூ.2.5 கோடி மதிப்பிலான கிரிப்டோ கரன்சியை விற்று, தனது வங்கிக் கணக்குக்கு பணமாக மாற்ற முயன்றபோது, இணையதளப் பக்கம் முடக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அசோகன், இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments