Advertisement

திருவள்ளூர் | மாயமான இளைஞர் முந்திரி காட்டில் புதைப்பு: 17 வயது சிறுவன் உட்பட 6 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள முருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் பிரவீன்குமார் (19). கடந்த மாதம் 10-ம் தேதி இரவு, வீட்டுக்கு அருகே உள்ள ஏரிக்கரைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர், மாயமானார்.

இதுகுறித்து, மணவாள நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதல் கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக 6 பேர் கொண்ட கும்பலால் பிரவீன்குமார் கொலை செய்யப்பட்டு, முருக்கஞ்சேரி அருகே உள்ள கொப்பூர் முந்திரி காட்டில் புதைக்கப்பட்டது தெரிய வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments