
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.2.33 கோடி மதிப்புள்ள வைரக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதை தாய்லாந்துக்கு கடத்திச் செல்ல முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு விமானத்தில் வைரக் கற்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் சுங்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய அதிகாரிகள், தாய்லாந்து செல்லும் பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் தீவிரமாக சோதனை செய்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments