Advertisement

திருப்பூர் | சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பனியன் நிறுவன அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர்: திருப்பூரில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பனியன் நிறுவன உரிமையாளருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருப்பூர் ஆண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (39). பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது பனியன் நிறுவனத்தில் வேலை செய்த 16 வயது சிறுமியை, கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதில் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு மகளிர் போலீஸார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, சரவணனை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments