
புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியின் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலின் ஒரு பெட்டியில், ரத்த வெள்ளத்தில் ஒரு பெண் கிடந்துள்ளார். பயணிகள் உதவியுடன் மீட்கப்பட்ட இவர், ராமர் கோயில் பாதுகாப்புப் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்தவர் என தெரியவந்துள்ளது.
உ.பி.யின் பிரயாக்ராஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவரான இப்பெண், அயோத்தியின் அருகிலுள்ள சுல்தான்பூர் மாவட்டக் காவல் பணியில் காவலராகப் பணியாற்றுகிறார். இவர், புனித நகரமான அயோத்தியில் சாவன் ஜுலா எனும் விழாவின் பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments