
கரூர்: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பேரூராட்சி பெண் கவுன்சிலர் கொலை வழக்கில் கொடுமுடியைச் சேர்ந்த தம்பதியை க.பரமத்தி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள சென்னசமுத்திரம் பேரூராட்சி 7வது வார்டு திமுக கவுன்சிலர் ரூபா (47). இவர் கரூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வீட்டு வேலைக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் கரூர் மாவட்டம் பவித்திரம் பாலமலை காட்டுப்பகுதியில் தலையில் காயங்களுடன் ரூபா சடலமாக நேற்றுமுன்தினம் கிடந்தார்.
அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, தோடு, வெள்ளிக்கொலுசு உள்ளிட்டவைகளை காணவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த க.பரமத்தி போலீஸார் ரூபாவுடன் வீட்டு வேலைக்கு செல்லும் ஈரோடு மாவட்டம் கொடுமுடி சாலைப் புதூரை சேர்ந்த நித்யா (33), கதிர்வேல் (37) தம்பதியை நேற்று (செப். 27ம் தேதி) பிடித்து விசாரித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments