Advertisement

சென்னை | ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.16 லட்சம் இழந்ததால் வியாபாரி தற்கொலை

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.16லட்சத்தை இழந்தவர், மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). ஜெராக்ஸ் இயந்திரத்துக்கான மை வியாபாரம் செய்துவந்தார். இவரது மனைவி ராதா(37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 3-ம் தேதி வெளியே சென்ற சுரேஷ், பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ராதா அளித்த புகாரின் பேரில், கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சுரேஷை தேடிவந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments