Advertisement

சென்னை: ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ரவுடி உட்பட 7 பேர் கைது

சென்னை: சென்னை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோடு 11-வது அவென்யூவில் டீக்கடை வைத்திருப்பவர் கலாம். கடந்த 12-ம் தேதி இவரது கடைக்குவந்த 7 பேர் கும்பல் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ரகளைசெய்து கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டுத் தப்பியது. இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில், கத்தியைக் காட்டி மிரட்டித் தப்பியது சென்னை செம்மஞ்சேரி குமரன் நகரைச் சேர்ந்த ரவுடிசகாயம் என்ற தேவ சகாயம் (38) என்பது தெரியவந்தது. இவர் மீது சென்னை மட்டும் அல்லாமல் மதுராந்தகம், ஆரணி காவல் நிலையம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 5 கொலை, 9 கொலை முயற்சி, 9 வழிப்பறி வழக்குகள் உட்பட சுமார் 30 குற்ற வழக்குகள் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments