Advertisement

திருப்பரங்குன்றத்தில் மாமியார் வீட்டில் ரூ.1 லட்சம், 5 பவுன் நகை திருடிய சென்னை மருமகன் கைது

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மாமியார் வீடு புகுந்து நகை, பணம் திருடிய சென்னை மருமகன் கைது செய்யப்பட்டார்.

திருப்பரங்குன்றம் பகுதியிலுள்ள சாவடி தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் மாலதிக்கும், சென்னையைச் சேர்ந்த கந்தவேல் என்பவருக்கும் திருமணம் நடந்தது. மாலதி தற்போது பெற்றோர் வீட்டில் உள்ளார். அவரது கணவர் சென்னையில் இருந்தார். இந்நிலையில் நேற்று லட்சுமி, மாலதி ஆகியோர் வெளியில் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments