Advertisement

சமந்தாவின் ‘யசோதா’ திரைப்படம் 3 நாட்களிலேயே இத்தனை கோடிகளா? - வசூல் நிலவரம்

சமந்தாவின் ‘யசோதா’ திரைப்படம் 3 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இரட்டை இயக்குநர்களான ஹரீஷ் நாராயணன் - ஹரி சங்கர் இயக்கியுள்ள திரைப்படம் ‘யசோதா’. இந்தப் படத்தில் வாடகைத் தாய் முறையை பயன்படுத்தி அப்பாவி ஏழைப் பெண்கள் ஏமாற்றப்படுவதும், அதை வைத்து நடக்கும் முறைகேடுகளை கண்டுப்பிடிப்பதே ‘யசோதா’ திரைப்படத்தின் கதையாகும். மிகவும் சஸ்பென்ஸ் த்ரில்லருடன் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக கடந்த 11-ம் மேதி திரையரங்குகளில் வெளியானது.

image

இந்நிலையில் இந்தப் படம் 3 நாட்களில் உலகம் முழுவதும் 20 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமமாக அறிவித்துள்ளனர். முதல் நாளில் மட்டும் இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ. 6.32 கோடி வரை வசூலித்தது. இந்தப் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி நடித்துள்ளார். மேலும் உன்னி முகுந்தன், முரளி சர்மா, சம்பத்ராஜ், மாதுரிமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ‘யசோதா’ படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் தயாரித்திருந்தது. 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments