Advertisement

சவுகார்பேட்டையில் கட்டிடம் இடிந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் - கட்டிட உரிமையாளர் மீது வழக்கு பதிவு

சென்னை: கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அந்த கட்டிடத்தின் உரிமையாளர் மீது 3 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை சவுகார்பேட்டை தங்கசாலை தெருவில் ஏகாம்பரநாதர் கோயில்அருகே உள்ள பழமையான கட்டிடம், கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக நேற்று முன்தினம் இடிந்துவிழுந்தது. அந்த வழியாகச் சென்றவர்கள், கட்டிடத்தின் கீழ் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கியவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கங்குதேவி (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments