Advertisement

நாட்டுக்கோழி வளர்ப்பில் ரூ.1.98 கோடி மோசடி: இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு

கோவை: நாட்டுக்கோழி வளர்ப்பில் ரூ.1.98 கோடி மோசடி செய்த இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) நேற்று தீர்ப்பளித்தது.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் ஜி.எஸ். பவுல்ட்ரி பார்ம்ஸ் என்ற நிறுவனத்தை சுரேஷ்குமார், ஜெகநாதன் ஆகியோர் நடத்தி வந்தனர். ‘இந்த நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால், ஷெட் அமைத்து, 400 முதல் 450 நாட்டுகோழிக்குஞ்சுகள் அளித்து, அதற்கான தீவனத்தை அளிப்போம். அதோடு, மாதம் ரூ.9 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகள் அளிப்போம். ஆண்டுக்கு ஒருமுறை ஊக்கத்தொகையாக ரூ.9 ஆயிரம் வழங்கப்படும். திட்ட முடிவில் முதலீடு செய்த பணத்தை திருப்பி அளித்துவிடுவோம்’ என விளம்பரப்படுத்தினர். இதேபோன்று விஐபி திட்டம் என்ற மற்றொரு திட்டத்தையும் அறிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments