Advertisement

கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் உயிரிழந்த 3 மாணவர்கள்.. திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உட்கொண்டதால், மூன்று மாணவர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 12 பேரை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சந்தித்து, அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்ததுடன், ஆறுதல் தெரிவித்து தேவையான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “சிறுவர்கள் 3 பேர் உயிரிழப்பு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. காய்ச்சல் ஏற்பட்டவுடன் மருத்துவரின் ஆலோசனையை பெற்றிருந்தால், 3 பேரின் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கலாம். சிகிச்சையில் உள்ள 4 மாணவர்களுக்கு மட்டும் இன்னும் காய்ச்சல் குறையாத நிலையில், தனியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். நல்லமுறையில் சிகிச்சை வழங்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

image

எஞ்சிய சிறுவர்கள் நல்லமுறையில் வீட்டுக்கு செல்லக்கூடிய நிலையில் உள்ளனர். உயிரிழந்த 3 சிறுவர்களின் பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர் தான், உணவில் ஏற்பட்ட கோளாறா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என்பது தெரியவரும். உணவில் தான் பிரச்சினை என அனுமானத்தின் மூலம் முதல் கட்டமாக தெரியவருகிறது. முதல்வர், சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவனை அனுப்பி உள்ளார். அவர் விசாரிக்க வர உள்ளார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments