Advertisement

சென்னை மருத்துவர் அடித்துக் கொலை - பெங்களூருவில் காதலி உட்பட 4 பேர் கைது

பெங்களூரு: சென்னையை சேர்ந்த மருத்துவர் விகாஷ் ராஜன் (27) கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவர் பெங்களூருவை சேர்ந்த பெண் பொறியாளரை காதலித்தார். இவர்களின் திருமணத்துக்கு குடும்பத்தினர் சம்மதித்த‌தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி விகாஷ் ராஜன் சமூக வலைத்தளத்தில் போலி கணக்கு தொடங்கி, தன் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் தனது நெருங்கிய நண்பர்களுக்கும் அந்த புகைப்படங்களை அனுப்பியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த அந்த காதலி, விகாஷ் ராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments