Advertisement

”ஒரே கவ்வுதான்..” : சாப் ஸ்டிக்கில் புலிக்கு உணவளித்தவரின் திக் திக் நொடிகள்!

வைரல் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லாத இடமாக மாறியிருக்கின்றன சமூக வலைதளங்கள். ஆச்சர்யப்படுத்தவும், அதிர்ச்சியடைய வைக்கவும் வைக்கும் வீடியோ பலவும் சமூக வலைதளங்கள் மூலம் காணக் கிடைக்கின்றன.

அதுவும் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் என்றால் சில நேரங்களில் அச்சுறுத்தவும் செய்யும், சில நேரங்களில் அதிசயிக்கவும் வைக்கும். அந்த வகையில் புலிகள் தொடர்பான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோ ஒன்று நெட்டிசன்களை பெரிதளவில் கவர்ந்திருக்கிறது.

அதில், வனப்பகுதியில் ட்ரக் வாகனத்தில் சென்றுக் கொண்டிருக்கும் போது ட்ரக்கில் இருந்தவர் தன்னிடம் இருக்கும் meat ஸ்டிக்கை அவ்வழியே சென்றுக் கொண்டிருந்த புலியிடம் நீட்டியிருக்கிறார்.

ஆள் உயரத்தில் இருக்கும் அந்த புலியும் ட்ரக்கில் வந்தவர் கொடுத்த பண்டத்தை மொச்சக் மொச்சக் என அசைப்போட்டு சாப்பிடுகிறது. சில நொடிகளே இருக்கும் இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ போஸ்ட்டில் நெட்டிசன்கள் பலரும் கலவையான கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதில், “அந்த புலி சாப் ஸ்டிக் கொடுத்தவரை கவ்வி கொல்லாமல் இருக்கும் வரை எல்லாம் நன்றாகத்தான் இருக்கும்” என்றும், “இது மிகவும் பாதுகாப்பற்ற, பொறுப்பற்ற செயல்” எனவும் பதிவிட்டிருக்கிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments