Advertisement

வாகன சோதனையில் போலீஸ் அதிகாரியை கத்தியால் குத்திவிட்டு தப்பிய குற்றவாளிகள்

ஹைதராபாத்: வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரியை பைக்கில் வந்த பழைய குற்றவாளிகள் இருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பிய சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செகந்திராபாத் அருகே மாரேடுபல்லி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் வினய் குமார் (30). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது மோட்டார் பைக்கில் வந்த இருவரை நிறுத்தி வினய் குமார் விசாரித்தபோது, அவரை திடீரென கத்தியால் குத்திவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதையடுத்து வினய் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments