Advertisement

கலகத் தலைவனாகும் உதயநிதி ஸ்டாலின்.. வெளியானது புதிய அறிவிப்பு!

தடையற தாக்க, மீகாமன், தடம் போன்ற வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட படங்களை இயக்கியுள்ள இயக்குநர் மகிழ்திருமேனி தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை கடைபிடித்து வெற்றியும் கண்டிருக்கிறார்.

10 ஆண்டுகளாக சினிமாத் துறையில் இருந்தாலும் வெறும் நான்கு படங்களை மட்டுமே இயக்கியிருக்கும் மகிழ்திருமேனி செல்வராகவன், கவுதம் மேனன் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக இருந்தவராவார். நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் அனுராக் காஷ்யப்பிற்கு தன்னுடைய காந்தக்குரலாம் டப்பிங் கொடுத்திருப்பார் மகிழ்திருமேனி.

இப்படி இருக்கையில், உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு படம் இயக்கி வந்தார் மகிழ்திருமேனி. இதில், நிதி அகர்வால் நடித்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனமே தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்திற்கு கலகத் தலைவன் என தலைப்பிடப்பட்டிருப்பதாகவும், அதற்கான மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது. கலகத் தலைவன் படத்தின் படபிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடைபெற்று வருகிறது. தொலைக்காட்சி உரிமத்தை கலைஞர் டிவி கைப்பற்றியிருக்கிறது. இருப்பினும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

தற்போது மாரி செல்வராஜின் மாமன்னன் படத்திலும் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். இதில் வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments