Advertisement

ஒரு நாள் தொடரில் யார் 'கெத்து'? இந்தியா - இங்கிலாந்து இடையே இன்று 3ஆவது போட்டி

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3ஆவது மற்றும் தொடரை வெல்லப்போவது யார் என நிர்ணயிக்கும் கடைசி ஒருநாள் போட்டி மான்சஸ்டரில் இன்று நடைபெறுகிறது.

இரு அணிகளுக்கு இடையே ஏற்கெனவே நடைபெற்ற 2 போட்டிகளில் முதலில் இந்தியாவும், 2ஆவது போட்டியில் இங்கிலாந்தும் அபார வெற்றிப்பெற்றன. இந்நிலையில் இன்றையப் போட்டியில் வெற்றிப்பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது. முதல் போட்டியில் இந்தியா சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டது. இதனால் குறைவான ரன்களில் இங்கிலாந்து ஆல் அவுட் ஆனதால், இந்தியா எளிதாக சேஸ் செய்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

image

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில், இந்தியா சிறப்பாக பந்துவீசி இங்கிலாந்தை 246 ரன்களுக்கு சுருக்கியது. ஆனால் பேட்டிங்கில் இந்திய அணி சொதப்பியது. ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் என அனைவரும் சொதப்பினர். இதனால் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதனால் இன்றைய ஆட்டத்தில் இந்தியா தனது பேட்டிங்கை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதேபோல இங்கிலாந்தின் பேட்டிங்கும் சுமார்தான். ஜாஸ் பட்லர், ஜோ ரூட், பேர்ஸ்டோ, ஜேசன் ராய் ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை.

இந்திய அணி (உத்தேசம்): ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா, சஹால், ஷர்துல் தாக்கூர்.

இங்கிலாந்து அணி (உத்தேசம்): ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், லிவிங்ஸ்டோன், மொயின் அலி, டேவிட் வில்லே, எவர்டான், கேர்ஸ், ரீஸ் டோப்லே.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments