Advertisement

தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு வடதமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு வங்கக்கடல், மத்திய அரபிக்கடல், கேரளா - கர்நாடகா, ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments