
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 76 காசுகள் அதிகரித்து ரூ.108.21க்கு விற்பனையாகிறது. அதேபோல் டீசலின் விலையும் ஒரு லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.98.21க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 12 நாட்களில் 10வது முறையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. சென்னையில் கடந்த 12 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.6.81 மற்றும் டீசல் விலை ரூ.6.85 அதிகரித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments