Advertisement

ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர்: சிந்து, சாய்னா மற்றும் கிடாம்பி முதல் சுற்றில் அசத்தல்!

ஆல்-இங்கிலாந்து ஓபன் தொடர் நடந்து முடிந்த கையோடு ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் தொடங்கியுள்ளது. மார்ச் 22 முதல் 27-ஆம் தேதி வரையில் இந்த தொடர் நடக்கிறது. இதில் இந்தியாவின் 20 வயது இளம் வீரரான லக்ஷயா சென் பங்கேற்கவில்லை. இருந்தாலும் சிந்து, சாய்னா மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் இதில் பங்கேற்றுள்ளனர். 

இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய இந்தியர்கள்!

மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா தனது முதல் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை Y Hoyaux உடன் விளையாடினார். 21-8, 21-13 என நேர் செட் கணக்கில் அவர் ஆட்டத்தை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பி.வி.சிந்துவும் தன்னை எதிர்த்து விளையாடிய டென்மார்க் வீராங்கனை L Kjærsfeldt-யை 21-14, 21-12 என்ற வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான அஷ்மிதா சலிஹாவும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதே நேரத்தில் ஆகார்ஷி காஷ்யப் தோல்வியை தழுவியுள்ளார். 

ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் டென்மார்க் வீரரை நேர் செட் கணக்கில் வீழ்த்தியுள்ளார். மற்றொரு இந்திய வீரர் சமீர் வெர்மாவும் இரண்டாவது சுற்றுக்கும் முன்னேறியுள்ளார். அதே போல சாய் பிரணீத் மற்றும் பிரனாய் ஆகியோருக்கும் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் பிரனாய் வெற்றி பெற்றுள்ளார். இரட்டையர் பிரிவிலும் இந்திய அணி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments