Advertisement

தொடர்ந்து 6ஆவது நாள் - இன்றும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை! விலை நிலவரம் என்ன?

கடந்த 7 நாட்களில் ஆறாவது முறையாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல் விலை 105 ரூபாயை தாண்டியுள்ளது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகளும் உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.18க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.95.33க்கும் விற்பனையாகி வருகிறது.

image

கடந்த 7 நாட்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.78, டீசல் லிட்டருக்கு ரூ.3.90 அதிகரித்திருக்கிறது. உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததால் 5 மாநில தேர்தலுக்கு பிறகு எரிபொருட்களின் விலை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதேபோல அவற்றின் விலை உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்தி: ஐபிஎல் 2022: RCB நிர்ணயித்த இமாலய இலக்கை எட்டிப்பிடித்த பஞ்சாப் கிங்ஸ்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments