Advertisement

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி சி52 ராக்கெட்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் இந்தாண்டின் முதல் செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. 

இந்தியாவின் பிஎஸ்எல்வி சி52 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஆய்வு மையத்திலிருந்து ஏவப்பட்டது. இந்த ராக்கெட் புவிக்கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்களை ஏந்திச் சென்றது. இருபத்து ஐந்தரை மணி நேர கவுன்ட்டவுனுக்கு பிறகு ஏவப்பட்ட இந்த ராக்கெட் திட்டமிட்ட பாதையில் பயணித்து வெற்றிகரமாக  3 செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments