
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடி வரும் இந்திய அணியின் கேப்டன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேப்டன் யாஷ் துல், துணை கேப்டன் ஷேக் ரசீது, ஆரத்யா யாதவ், வாசு வாட்ஸ், மணவ் பராக், சித்தார்த் யாதவ் ஆகிய ஆறு பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு்ள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இந்திய அணியில் 17 பேர் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்களில் 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது அணிக்கும் கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மாற்று வீரர்களான 5 பேர் இந்தியாவிலிருந்து மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்பட்டுச் செல்லக்கூடும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: “இதுவே எனது கடைசி சீசன்; எனக்கு வயதாகிவிட்டது” - ஓய்வை அறிவித்தார் சானியா மிர்சா!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments