Advertisement

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சென்ற கார் விபத்து

கார் விபத்தில் சிக்கிய பிரபல ஹாலிவுட் நடிகரும், கலிஃபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் காயங்கள் ஏதுமின்றி தப்பினார். ப்ரன்ட்வுட் பகுதியில் அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதின. அதனால் அர்னால்டு காரும், ஒரு சிறிய காரின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் தலையில் காயம் ஏற்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments