
சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய கவுன்ட்டரில் 1.32 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துவிட்டு நாடகமாடிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.
திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் கட்டிப்போட்டுவிட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக ரயில்வே ஊழியர் டீக்காராம் நாடகமாடியது அம்பலமானது. ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாத நிலையில் அருகேயுள்ள சிசிடிவி கேமராக்களை ரயில்வே போலீசார் ஆய்வு செய்தனர்.

கொள்ளை நடந்ததாக கூறப்பட்ட அதிகாலை நேரத்தில் ரயில் நிலையத்திற்கு பெண் ஒருவர் வந்து சென்றது சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த பெண், ரயில்வே ஊழியர் டீக்காராமின் மனைவி என தெரியவந்தது. இதையடுத்து மனைவியுடன் சேர்ந்து ரயில்வே ஊழியர் டீக்காராம், ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 500 ரூபாயை கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: வங்கி கணக்கிலிருந்து பறிபோன பணம்.. அதிர்ச்சி கொடுக்கும் ‘சிம் ஸ்வாப்’ மோசடி-நடந்தது என்ன?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments