
கோவையில் போலியான ஹால்மார்க் முத்திரை பதித்த ரூ.11 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை இந்திய தர நிர்ணய அமைவன (பிஐஎஸ்) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை ராஜ வீதி, செட்டி வீதி, ஒப்பணக்கார வீதி, கருப்பையா வீதி பகுதிகளில் தங்கத்துக்கு போலியாக ஹால்மார்க் முத்திரை பதித்து விற்பனை செய்வதாக பிஐஎஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பிஐஎஸ் கோவை கிளை தலைவர் மீனாட்சி கணேசன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்றுமுன்தினம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ராஜவீதி, கருப்பையா வீதியில் இயங்கிவந்த இரு மையங்களில் முறையான அனுமதியின்றி போலியாக தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த ரூ.11 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments