Advertisement

'மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கானப் பாதை விரைவில் நிரந்தரமாகும்' - மு.க.ஸ்டாலின்

சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள தற்காலிகப் பாதை விரைவில் நிரந்தரமாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளும் கடல் அலையை அருகே சென்று ரசிக்கும் வகையில் மெரினாவில் சாய்தள பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எத்தனை முறை சென்றாலும் கடல் சலிக்காததது என்றும், அதில் ஒரு முறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வகையில் தற்காலிகப் பாதை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதை விரைவில் நிரந்தரம் ஆக்குவோம் என்றும் கூறியுள்ளார்.



இதையும் படிக்க: ”நிஜத்தில் எனக்கு பல காதல்கள் இருந்துள்ளன”- ‘மின்னல் முரளி’ நடிகர் குரு சோமசுந்தரம் பேட்டி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments