Advertisement

கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் பல மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (12.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

image

அதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி  அறிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய  மாவட்டத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments