
தொடர் கனமழை காரணமாக, தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், செங்கல்பட்டு, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுத்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். செங்கல்பட்டு, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலும் கனமழை காரணமாக, பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments