Advertisement

காந்தியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

தேசப்பிதா காந்தியடிகளின் 153ஆவது பிறந்தநாளையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

நாடு முழுவதும் காந்தியடிகளின் 153ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் காந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

image

அதேபோல, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

image

இதேபோல, தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தியின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments