Advertisement

துபாயில் இருந்து மதுரைக்கு வந்தவரிடம் 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

துபாயில் இருந்து மதுரை வந்திறங்கிய பயணியிடம் சுமார் இரண்டரை கோடி மதிப்பிலான 5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
 
சுங்கத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மதுரை விமான நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சந்தேகப்படும்படியாக வந்த விமானப் பயணியிடம் சோதனை செய்ததில், ஒரு பெட்டிக்குள் ஒரு கிலோ எடை கொண்ட ஐந்து தங்க கட்டிகளை கருப்பு நிற டேப் ஒட்டி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான அந்த தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், அந்த நபரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments