Advertisement

இந்தியா: நேற்றைவிட கணிசமாக குறைவு - புதிதாக 15,786 பேருக்கு கொரோனா

நேற்று 18,454 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கணிசமாகக் குறைந்து புதிதாக  15,786 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
 
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  15,786 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 231 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,53,042ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 18,641 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,35,14,449 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,75,745 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
image
நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டும் 6,27,277 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 100.59 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments