Advertisement

மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகிறார் எல்.முருகன்

மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை எம்.பியாக எல்.முருகன் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

மத்திய அமைச்சராக உள்ள எல்.முருகன் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறார். மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகனை அறிவித்துள்ளது பா.ஜ.க தலைமை.

image

ஒரு மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற விதியையும் அவர் பூர்த்தி செய்ய உள்ளார். ஏற்கெனவே தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments