Advertisement

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: நாளை முதல் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நாளை முதல் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
 
9 மாவட்டங்களில் நடத்தப்படும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை, பாஜக கூட்டணியுடன் அதிமுக எதிர்கொள்கிறது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, 9 மாவட்டங்களிலும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், மனைவியின் இறப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஒரு மாதமாக எந்த அரசியல் நிகழ்விலும் பங்கேற்காமல் உள்ளார்.
 
image
நாளை முதல் அவர் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். நாளை செங்கல்பட்டு - காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், இரண்டாம் தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், மூன்றாம் தேதியன்று விழுப்புரம், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகளுடன் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கிறார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments