Advertisement

உசிலம்பட்டி: மது அருந்த பணம் தராத தாய் - ஆத்திரத்தில் மகன் செய்த கொடூரம்...

மதுரை உசிலம்பட்டி அருகே மது அருந்த பணம் தராத தாயை, பெற்ற மகனே மிதித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கோடாங்கிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், மது அருந்த பணம் கேட்டு அடிக்கடி தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. வழக்கம்போல் பணம் கேட்டபோது, மகனிடம் பணம் இல்லை என தாய் பெருமாயி கூறியுள்ளார்.
அப்போது பெற்ற தாய் என்றுகூட பார்க்காமல் பெருமாயியை அவரது மகன் அடித்து உதைத்துள்ளார். வேதனையில் துடிதுடித்த பெருமாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகனை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments