Advertisement

வகுப்பறையை தாண்டிய வாசிப்பை ஊக்குவிக்க வேண்டும் - நல்லாசிரியர்களுடன் ஸ்டாலின் உரையாடல்

கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின் பெற்றோர்களின் கவனம் அரசுப் பள்ளிகள் மீது பெரிதும் குவிந்து வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
2020- 21ஆம் கல்வியாண்டில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துரையாடினார். அறிவார்ந்த சமூகம் வகுப்பறையில் இருந்தே வளர்த்தெடுக்கப்பட வேண்டும் எனவும் மாணவர்களுக்கு வகுப்பறையைத் தாண்டிய வாசிப்பு இருக்க ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் எனவும் அப்போது அவர் கேட்டுக்கொண்டார். கொரோனாவுக்கு பின் பெற்றோர்களின் கவனம் அரசுப் பள்ளிகளில் குவிந்து வருவதால், இதனை ஆசிரியர்கள் இன்னும் வலுப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments