Advertisement

பஞ்சாப் முதல்வரான சரண்ஜித் - ராகுல் காந்திக்கு பட்டியலினத் தலைவர்கள் நன்றி

பஞ்சாப் மாநில முதலமைச்சராக பட்டியலினத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னியை நியமித்ததற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை பட்டியலினத் தலைவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இதுதொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, பட்டியலினத் தலைவர்களுடன் பேசியது சிறப்பாக அமைந்ததாகக் கூறியுள்ளார். அனைத்து சமூகத்தினருக்கும் சமவாய்ப்பு வழங்கும் தீர்மானத்தில் உண்மையாக இருக்கிறோம், ஜெய் ஹிந்த் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப் வரலாற்றில் முதன்முறையாக பட்டியலினத்தைச் சேர்ந்தவர் முதல்வராக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments