Advertisement

பாராலிம்பிக்: 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார் அவனி

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவின் துப்பாக்கி சுடுதலில் அவனி லெகாரா வெண்கலம் வென்றார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகாரா வெண்கலம் வென்றார். இவர் ஏற்கெனவே 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். ஒரே பாராலிம்பிக்கில் இப்போது 2 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார் அவனி. இதன் மூலம் பாராலிம்பிக்கில் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments